அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு  கூட்டம் நிறைவடைந்த பின்னர் செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இருவருடன் ட்ரம்ப் சென்றுகொண்டிருந்த போது ஊடகவியலாளர்களுக்கான பிரிவிலிருந்த ஒருவர் ரஷ்ய நாட்டு கொடிகள் பலவற்றை அவர் மீது வீசி எறிந்து ட்ரம்பை அரச துரோகி என கூறி கூச்சலிட்டுள்ளார்.

இதனை  பொருட்படுத்தாத ட்ரம்ப் தம்ப்ஸ் அப் செய்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார், 

ரஷ்யாவுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், வரி தொடர்பில் அரச துரோகியொருவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அந்நபர் இதன்போது கூறினார்.

இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில்  கைது செய்துள்ளனர்.

விசாரணைகளில் கைது செய்யப்பட்டவரது  பெயர் ரயன் க்லேடன் எனவும் அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு  உள்ளே நுழைந்துள்ளார் என தெரிய வந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நபர் 'அமெரிக்கன் டேன் அக்ஷன்' எனப்படும் அமைப்பின் பிரதிநிதி என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.