‘2 பொயிண்ட் ஓ’  தமிழ் படமல்ல அது ஒரு இந்திய படம் என்றார் இயக்குநர் ஷங்கர்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘2 பொயிண்ட் ஓ’ படத்தின் பணிகள் அனைத்து முடிவடைந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இன்று டுபாயில் இன்று செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அக்சய் குமார், நாயகி எமி ஜேக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பங்குபற்றினர்.

இதன்போது பேசிய இயக்குநர் ஷங்கர்,  ‘2 பொயிண்ட் ஓ படம் தமிழ் படமல்ல. இந்திய படம். ஆனால் இந்திய படம் போலவும் இருக்காது. ஹொலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கும். படத்தில் அறிவியல், கற்பனை, சமூகம் ஆகியவை கலந்திருக்கும்.’ என்றார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது,‘ இந்த படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி, பெருமைக்குரிய பெரிய பட்ஜட் படமாக இது இருக்கும். படம் வெளியான பின் இந்தியர்கள் மட்டுமல்லாது அயல்நாட்டினரும் கொண்டாடும் வகையில் இந்தபடம் அமையும்.’ என்றார்.

நாளை இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் டுபாய் நாட்டு மன்னர் சிறப்பு அதிதியாக பங்குபற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தகவல் : சென்னை அலுவலகம்