இந்­திய தேசியக் கொடியை எரித்து அதை புகைப்­படம் பிடித்து, 'பேஸ்புக்'கில் பதி­வேற்­றிய நபரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஆனால் அவர் கைதான போது மகிழ்ச்­சி­யுடன் பொலி­ஸா­ருடன் இணைந்து செல்பி எடுத்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சமூக வலை­த்த­ள­மான, 'பேஸ்­புக்கில் இளைஞர் ஒருவர் இந்­திய தேசியக் கொடியை எரித்து அதனை புகைப்­படம் எடுத்து வெளி­யிட்­டுள்ளார். அப் புகைப்­படம் 'வாட்ஸ் அப்'பிலும் வலம் வந்­துள்­ளது. இதனால், 'தேசியக்கொடியை எரித்­தவர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்' என, பொது­மக்கள் பலரும் சென்னை பொலிஸ் ஆணை­யாளர் அலு­வ­லகம், மாவட்ட எஸ்.பி.,அலு­வ­லகம் மற்றும் பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பாடு அளித்­துள்­ளனர்.

முதல்­கட்ட விசா­ர­ணையில், தேசியக் கொடியை எரித்­தவர் நாகப்­பட்­டி­னத்தைச் சேர்ந்த மகேந்­திரன் என்­பதும், அவர் சென்­னையில் தங்கி வேலை­செய்து வரு­வதும் தெரிய வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஆயினும் அவர் கைது செய்­யப்­பட்­ட­போது மகிழ்ச்­சி­யுடன் பொலி ஸாருடன் செல்பி எடுத்தது தற்போது சமூகவலைதளங்களில் வைரஸாக பரவி வரு கின்றது.