Bethune சிறையில் இருந்து நபர் ஒருவர் நேற்று  தப்பித்து சென்று 5 வயதுடைய தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு மீண்டும் பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் Bethune சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர்  உள்ளிட்ட சிறைக் கைதிகள் நேற்று புதன்கிழமை சிறைச்சாலையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள  Nœux-les-Mines நகருக்கு கலாச்சார நிகழ்வு ஒன்றுக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை கைதிகள் குறித்த நிகழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  அப்போது குறித்த 34 வயதுடைய நபர் மாலை 4 மணி அளவில் நிகழ்வில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். 

அங்கிருந்து வயல்களினூடே சில மைல் தூரங்கள் நடந்து சென்று தன் 5 வயது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளார்.

6 மணிநேரங்கள் நடந்து சென்று தன் மகளுடன் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை செலவழித்து விட்டு பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து ஆஜராகியுள்ளார்.