எம்மில் 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு அவர்களின் கண் இமைகளின் அருகே சிறிய பருக்கள் போல் கட்டிகள் ஏற்படக்கூடும். இதற்கு ஸிரிங்கோமா என்று பெயர். தீங்கு விளைவிக்காத கட்டி என்றாலும், இதற்குரிய சிகிச்சை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்று மில்லிமீற்றர் சுற்றளவிற்கு ஏற்படும் இந்த சிறிய பருக்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், கண் இமைகளை இமைக்கும் போது உறுத்தலை ஏற்படுத்தலாம். இந்த கட்டிகளுடன் பொது இடங்களில் பயணிக்கும் போதும், மற்றவர்களுடன் பேசும் போதும் அவர்களின் கவனம் இதன் மீது திரும்பக்கூடும். இதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படலாம். 

விற்றமின் ஏ மற்றும் ஈ குறைப்பாட்டால் இவை ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு சில பெண்களுக்கு 40 வயதிற்கு பின்னர் இவை ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு லேசர் சத்திர சிகிச்சை மூலமும், எலக்ட்ரோ சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

டொக்டர் தாஜுதீன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்