கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து ஆயுதக் குவியல் ஒன்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.

கொடிகாமம், பாதிரியபுலம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் 12 கிளேமோர் குண்டுகள், 60 மில்லிமீற்றர் மோர்ட்டார்கள் ஆறு மற்றும் வெடிக்கக் கூடிய நிலையில் இருந்த 30 கைக்குண்டுகள் என்பன அடங்கும்.

கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதங்கள் பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டன.