ஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Published By: Robert

26 Oct, 2017 | 12:05 PM
image

ஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என போடப்பட்டிருந்த பெயர் பலகை இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் ஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மீண்டும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இந்த நிலையம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று காலை முன்னெடுக்கபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையகத்தில் பல பாகங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் தொழிற்பயிற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாக 1998ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பயிற்சி நிலையத்தை 2000ம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.

மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவரால் ஜேர்மனி நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மூலமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி அமைக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிலையம் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் ஆறுமுகன் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இன்றைய நல்லாட்சி அரசாங்க காலம் வரை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இயங்கி வரும் இந்த நிலையம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04