வட்டுவாகல் கடற்படைமுகாம் வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.!

Published By: Robert

26 Oct, 2017 | 10:47 AM
image

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க  நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கப்பட இருப்பதாக அறிவித்தல் வந்த நிலையில், இன்றையதினம் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. இதனை அறிந்த மக்கள் குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் (எ35) பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடான போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தடைப்பட்டிருந்தது. 

அதனை அடுத்து, வீதியை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பொலிஸார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வீதிமறியலை கைவிடுமாறு கோரிய போதும் மக்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

அதன்பின்பு, மக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இன்று நடைபெற இருந்த குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பான அளவீட்டு பணிகள் இன்று நடைபெறமாட்டாது என தெரிவித்ததோடு உரியவர்களுக்கு காணி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் தெரிவிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் மக்களால் கைவிடப்பட்டது.

குறித்த மக்களின் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்துகொண்டு மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இறுதி யுத்தத்துக்கு பின்னர் குறித்த கடற்படை முகாம் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டதோடு கடற்படைமுகாம் நவீன வடிவில் பாரிய படைத்தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடற்படைத்தளத்துக்கு நிரந்தரமாக காணி சுவீகரிப்பு நடைபெற பல முறை அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58