நாட்டின் மனசாட்சியை நஞ்சூட்டும் முயற்சி: அமைச்சர் மங்கள கண்டனம்

Published By: Devika

26 Oct, 2017 | 09:59 AM
image

புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் சார்பாக அவரது ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படவேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இலங்கையினுள் அமைதி, ஒற்றுமை, சௌஜன்யம் என்பனவற்றை ஏற்படுத்தும் முகமாகவே அனைவருக்கும் பொதுவான, நியாயமான புதிய அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சியெடுத்துள்ளது.

பொறாமையும், பழிவாங்கும் உணர்வும் கொண்ட ஒரு குழுவினர், இலங்கையில் சமரசத்தை ஏற்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்துவரும் முயற்சிகளை சர்வதேசமே பாராட்டுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் உள்ளனர். அதன் உச்சபட்ச வெளிப்பாடே விமல் வீரவன்சவின் கருத்து.

இதுபோன்ற இனவாதத்துக்கு ஆதரவான அரசியல்வாதிகள் ஒட்டு மொத்த நாட்டினது மனசாட்சியையும் நஞ்சூட்டப் பார்க்கிறார்கள். எனினும், இதுபோன்ற எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு நியாயமானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38