நியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

231 என்ற ஓட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, நாற்பத்தாறு ஓவர்களில் 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 68 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியையடுத்து, மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் 1-1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சம நிலையில் இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி கான்பூரில் நடைபெறவுள்ளது.