இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (24) கட்டார் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை இன்று (25) சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது பரஸ்பர பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை தொடர்புகளை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது.