(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கெடுபிடிகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்திடமும் முறையிட்டுள்ளோம். எனவே குறித்த விடயம் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காலம் ஒதுக்கித் தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

Image result for vasudeva nanayakkara virakesari

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.