லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாமஸ்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற பொழுதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் மற்றுமொருவரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.