(ஆர்.யசி)

நாட்டின் தேவை கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியுமே புதிய அரசியல் அமைப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. நாட்டினை துண்டாட எவரும் புதிய அரசியல் அமைப்பினை கேட்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்தது.  13 ஆம் திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே நாட்டில் பிரிவினைவாதம் பலமடைந்துவிடும். அவ்வாறான நிலையில் நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பு வருமாயின் ஜே.வி.பி யே முதலில் எதிர்க்கும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.  

Image result for ரில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.