சைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், சற்று முன்னர் நிறைவுபெற்ற இலங்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான தகுதிகள், தராதரங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது.

சபைத் தலைவர் பேராசிரியர் கொலிவின் குணரத்ன தலைமையில், சற்று முன்னர் நிறைவுபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.