கடுவெலை, வெலிவிட்டவைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வெலிவிட்டவில் வாடகை வீட்டில் தாயும் மகனும் குடியிருந்தனர். தாய் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய தாய், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது மகனைக் கண்டு அலறினார். இதையடுத்து அங்கு வந்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்படி அங்கு வந்த பொலிஸார், மகனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், சில நாட்களாக தாய்க்கும் மகனுக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.