அமைச்சரவை தீர்மானங்கள்

Published By: Priyatharshan

25 Oct, 2017 | 03:23 PM
image

2017.10.24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள் பின்வருமாறு,

01. நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் (Secratariat for Coordinating Reconciliation Mechanisms - SCRM) கால எல்லையினை நீடித்தல் (விடய இல.5)

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டிலிருந்து 02 வருடங்களுக்கு அமுலாகும் வகையில் நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் (Secratariat for Coordinating Reconciliation Mechanisms - SCRM) ஸ்தாபிக்கப்பட்டது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் சாதாரண பொது மக்களை அறிவுறுத்தி திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, அச்செயலகத்தின் கால எல்லையினை 2019-03- 31 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை சட்டமூலம் - 2017 (விடய இல. 08)

நிதிச்சந்தை முகங்கொடுக்கின்ற நிகழ்கால சவால்களுக்கு ஏற்றாற் போல் 1987 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையானது ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சர்வதேச ரீதியில் பின்பற்றப்படுகின்ற மூலாதாரங்கள் மற்றும் தரங்களை கவனத்திற் கொண்டு இலங்கைக்காக முன்மொழியப்பட்ட “பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை சட்டமூலம்” தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அச்சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் (BIDTI) மற்றும் நேபாளத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் நிறுவனத்துக்கும் (IFA) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 10)

இலங்கை மற்றும் நேபாளத்துக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்டகால நட்புறவினை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளிலும் வளர்ந்து வருகின்ற தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் (BIDTI) மற்றும் நேபாளத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் நிறுவனத்துக்கும் (IFA) இடையில் மேற்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் பிரேரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் அவ்வொப்பந்தத்தை பலனுள்ள முறையில் செயற்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் முறையினை விருத்தி செய்தல் (விடய இல. 11)

பாதஹேவாஹெட்ட மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உரித்தான 14 கிராமங்களில் வசிக்கும் 6,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதிகள் இன்றி படும் கஷ்டத்தை கவனத்திற் கொண்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள் வசிக்கின்ற அநுரகம, புபுதுகம, முதுணகடை உட்பட 14 கிராம மக்களின் நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதியினை பயன்படுத்தி, குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் முறையினை விருத்தி செய்வது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. வத்தேகமை சமுர்த்தி பிரஜா வங்கி கட்டிடத்தை நிர்மாணித்தல் (விடய இல. 12)

அடைந்துக் கொள்வதற்கு கடினமான இடத்தில் அமைந்துள்ள, பல்வேறு குறைப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கண்டி, வத்தேகமை சமுர்த்தி பிரஜைகள் வங்கியினை மக்களுக்கு மிகவும் வசதியான இடத்தில் அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக வத்தேகமையில் காணப்படுகின்ற 20 பேர்ச்சஸ் அளவிலான அரச காணியினை, அரச சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் வேறு பாதுகாப்பான இடங்களில் மீள குடியமர்த்த படி வேண்டிய குடும்பங்களுக்காக நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 13)

வெள்ளப்பெருக்கு அதி அவதானம் நிறைந்த வலயங்களில் வசிக்கின்ற பாதிக்கப்படுகின்ற 05 மாவட்டங்களில் வாழும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்காக 1,122 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. விசேட வைத்தியர்களின் ஆவணங்களை ஸ்தாபிப்பதற்காக வைத்திய கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 14)

ஒவ்வொரு நிபுணத்துவம் தொடர்பில் வைத்தியர்களுக்கு வெவ்வேறாக பதிவு செய்வதற்காக தனித்தனி ஆவணங்களை முன்னெடுப்பது, பொது மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். இவ்வம்சத்தை கவனத்திற்கொண்டு விசேட வைத்தியர்களின் ஆவணத்தை தயாரிப்பதற்காக மருத்துவ கட்டளைகள் சட்டத்தினை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. 

அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள வைத்திய கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான திருத்த சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ‘யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்குரூபவ் தென்மராட்சி’ பிரதேசத்தில் புதிய தொழில் பயிற்சி கல்லூரியினை ஸ்தாபித்தல் (விடய இல. 16)

யாழ். மாவட்டத்தில் தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக 8,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதும், அதில் 1,500 பேருக்கு தொழில்நுட்ப கல்லூரியின் வசதிகள் காணப்படுகின்றன. இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு, யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்கு, தென்மராட்சி’ பிரதேசத்தில் 560 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அடுத்த இரு வருடத்துக்குள் புதிய தொழிற் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. களுஓயா ஆற்றுப்பள்ளத்தாக்குக்காக மழைநீர் கழிவு மற்றும் சூழலினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 17)

களுஓயா ஆற்றுப்பள்ளத்தாக்குக்காக மழைநீர் கழிவு மற்றும் சூழலினை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் 2018 – 2020 இனை 05 வருட காலத்தினுள் திட்டமிட்டு செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அவ்வேலைத்திட்டத்தினை வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் முன்னுரிமையளிக்கப்பட்ட வேலைத்திட்டமாக செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கையினுள் மோசடிகளை குறைப்பதற்காக தேசிய செயற்றிட்டம் ஒன்றை அங்கீகரித்தல் (விடய இல.26)

இலங்கையினுள் மோசடிகளை குறைப்பதற்காக தேசிய செயற்றிட்டம் ஒன்றை உரிய நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிப்பது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் பணியாளர்களை அனுப்புவதற்காக கொரியா குடியரசுடன் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 31)

வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் பணியாளர்களை அனுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் கொரியா குடியரசுக்கும் இடையில் இரு வருட காலத்துக்காக 2015 ஆம் ஆண்டு செய்யு கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடர்ந்தும் பலனுள்ள விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி மேலும் இரு வருடத்துக்கு நீடிப்பது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரலயினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. ஒன்றிணைந்த முத்திரைகளை வெளியிடுவதுடன் தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு தபால் நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 32)

இலங்கையானது ரஷ்யா கூட்டரசாங்கம் மற்றம் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தி மற்றும் கொரியா குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 40 வருடங்கள் பூர்த்தி என்பவற்றை அனுஷ்டிப்பதற்காக நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ஞாபகார்த்த நினைவு முத்திரைகளை வடிவமைப்பது தொடர்பில் இலங்கை தபால் திணைக்களமானது ஒவ்வொரு நாடுகளினதும் தபால் நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. புதிய தேர்தல் முறை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 33)

2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் (திருத்தச்) சட்டம் தொடர்பிலும் அதன் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பிலும் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் பிரதமர் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா, மகளீர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் (விடய இல. 25)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகளை “திட்டமிட்டு செயற்படுத்தல்” (Design and Build)  அடிப்படையின் கீழ், 1,359.35 மில்லியன் வரியுடன் கூடிய ரூபாய்களுக்கு, பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் (CECB) மற்றும் சென்ட்ரல் இன்ஜினியரின் செர்விஸ் தனியார் கம்பனி (CESL) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. புத்தளம் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரிகளை அவசர நிலைமை கொள்முதல் செய்யும் (Spot Tender) முறையின் கீழ் கொள்முதல் செய்தல் (விடய இல. 43)

புத்தளம் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரிகளை அவசர நிலைமை கொள்முதல் செய்யும் (Spot Tender) முறையின் கீழ் கொள்முதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரி 91.85 அமெரிக்க டொலர்கள் வீதம் 300,000 மெட்ரிக் தொன் நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை சிங்கப்பூரின் M/s Swiss Singapore Overseas Enterprises Pvt (Ltd.)  நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. டீசல் ஜெனரேட்டர் 50, டிரான்ஸ்போமர் 25 தொகுதிகள் மற்றும் டீசல் எரிபொருள் தாங்கிகள் 25 என்பவற்றை போக்குவரத்து செய்து பொருத்துவதற்கான டென்டர் (விடய இல. 44)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் டீசல் ஜெனரேட்டர் 50, டிரான்ஸ்போமர் 25 தொகுதிகள் மற்றும் டீசல் எரிபொருள் தாங்கிகள் 25 என்பவற்றை போக்குவரத்து செய்து பொருத்துவதற்கான டென்டரினை M/s Sterling and Wilson Pvt (Ltd.), India நிறுவனத்துக்கு வழங்குவதற்காக இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சிறு குளங்களை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 45)

2015/16 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி புனரமைக்கப்பட வேண்டிய 10,497 சிறு நீர்ப்பாசன துறைகள் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான ஆளனி பற்றாக்குறை கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படுவதால், அதற்கு தீர்வாக துரிதமாக புனரமைக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்ட 05 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கும் அதிகமான தொகையினை செலவிட வேண்டிய திட்டங்களுக்கு அவசியமான பொறியியல் மதிப்பீட்டினை தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக வேண்டி தகைமை பொருந்திய அநுபவம் வாய்ந்த வெளி நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. திருமணமான கனிஷ்ட தரத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் (விடய இல. 47)

கொழும்பு 02, குமாரன் ரத்னம் வீதியில் அமைந்துள்ள திருமணமான கனிஷ்ட தரத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 482.4 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு Construction Managers & Planers (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொட்டி (Tank)தொகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கடற்படை எண்ணெய் (MGO) மற்றும் CST எரிபொருள்களை அகற்றுதல் (விடய இல. 50)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொட்டி (Tank) தொகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கடற்படை எண்ணெய் (MGO) மற்றும் CST எரிபொருள்களை அகற்றுவதற்கு கோரப்பட்ட விலைமனுக்களுக்கு அமைவாக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் சிபார்சின் பெயரில் எரிபொருள் தொகையினை Interocean Energy (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு 3,220,800 அமெரிக்க டொலர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. இலங்கை துறைமுக அதிகார சபையின் Terminal Management Software (TMS) System  இனை விருத்தி செய்தல் (விடய இல. 51)

இலங்கை துறைமுக அதிகார சபையின் Terminal Management Software (TMS) System இனை இலங்கை துறைமுக அதிகார சபை நிதியினை பயன்படுத்தி விருத்தி செய்வதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படுகின்ற நிலையியல் கொள்முதல் குழுவினை நியமிப்பதற்கும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. நுண் மற்றும் வீட்டு கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான “திவியட உதானய” வேலைத்திட்டம் (விடய இல. 52)

பல்வேறு துறைகளில் ஈடுபடுகின்ற வீட்டு உற்பத்தியாளர்கள் 10,000 பேரினை வணிக மட்ட வியாபாரிகளாக மாற்றுவதற்கும், அறிவு மற்றும் திறன் விருத்தி வேலைத்திட்டங்களின் மூலம் 11,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமான 11,000 வேலைவாய்ப்புக்களை புதிதாக உருவாக்குவதற்கு ஏதுவான வகையில் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற இதனுடன் தொடர்பான பல்வேறு கடன் வழங்கும் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டமாக “திவியட உதானய” வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நன்மையின் நிமித்தம் மிகவும் வசதி வாய்ப்புகளுடன் கூடிய மருத்துவ சேவையினை வழங்குதல் (விடய இல. 53)

சுரியாக காரணங்களை இனங்காண்பதற்கு முடியாத உயிர்கொல்லி சிறுநீரக நோயானதுரூபவ் இலங்கையில் 11 மாவட்டங்களிலுள்ள 60 பிரதேச செயலக பிரிவுகளில் பரந்து காணப்படுகின்றன. அதனடிப்படையில் பல்வேறு நிலையான பணிகளை மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டு, சிறுநீரக நோய் நிவாரண செயலணி, சுகாதார, போசாணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இலங்கை இராணுவத்தினரதும் கடற்படையினரதும் பங்களிப்புடன் 462.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கண்டி, அநுராதபுரம், கிரிதுருகோட்டை ஆகியி பிரதேசங்களை மையப்படுத்தி பிரதான 03 வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. 2018 ஆம் ஆண்டினை உணவு உற்பத்தி வருடமாக பிரகடனப்படுத்துதல் (விடய இல. 60)

அரச தரப்பினர், தனியார் பிரிவினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் இணை பங்குபற்றலுடன் உணவு உற்பத்தி தொடர்பிலான கொள்கை மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி 2018 ஆம் ஆண்டினை “உணவு உற்பத்தி வருடமாக” பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49