இந்தியா - மேட்டுப்பாளையம் அருகே இளம் பெண் ஒருவர் காதலரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனியை  21 வயதுடைய குறித்த இளம் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போனதை அடுத்து அவரது பெற்றோர்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞன் ஒருவரை குறித்த பெண் காதலித்தது தெரிய வந்துள்ளது . இதனையடுத்து குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை  நடத்திய போது கல்லார் பகுதியில் மலையிலிருந்து கீழே தவறி விழுந்து குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்

ஆனால் குறித்த பெண்ணின் உடலில் உடைகள் இல்லாததும் காயங்கள் இருப்பதும் அவர் கொலை செய்யப்பட்டு  இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதன் போதே குறித்த பெண்னை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற  குறித்த இளைஞன் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு வெளியே தெரியாமல் இருக்க முட்புதரில் உடலை கற்களை கொண்டு மூடியது தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞனை பொலிஸார்  கைது செய்து அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.