வவுனியா பேருந்து நிலைய வர்த்தக தொகுதியில் நடைபாதை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது என  நகரசபை செயலாளர் ஆர். தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனிய மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த வவுனியா நகரசபை செயலாளர் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் மக்கள் பயணம் மேற்கொள்ளும் நடைபாதையில் வியாபாரங்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்று வர்த்தக நிலையங்களையும் நேற்று அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு தொடர்புபட்ட அதிகாரிகளிடம் பணித்துள்ளார். 

அத்துடன் வியபாபர நிலையங்களை உரிமையாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் எனவும்  நடைபாதைகள், சுற்றியுள்ள நிலையங்களில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போடுமாறும் வியாபார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.