கண­வ­னுக்கும் மனை­விக்கும் இடை யில் ஏற்­பட்ட வாய்த் தர்க்கம் முற்றி மோத­ லாக மாறி­யதில் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் கத்­தி­யொன்­றினைஎடுத்து, மனை­வியின் இரு கைக­ளையும் வெட்டி வீழ்த்­திய சம்­ப­வ­மொன்று  நேற்று ஊவா  பர­ண­க­மை யில் இடம்­பெற்­றுள்­ளது. 

வீழ்த்­தப்­பட்ட இரு கைக­ளுடன் மனைவி, நுவ­ரெ­லியா அர­சினர் மருத்­து­ வ­ம­னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

சம்­பவம் தொடர்பில் ஊவா -­ப­ர­ ண­கமைப் பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலி ஸார் பெண்ணின்  கண­வனைக் கைது செய்­துள்­ள­துடன், கைகளைத் துண்­டிக்க பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­தி­யையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

ஊவா-­ப­ர­ண­கம பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி கே.எம்.எம். ஜனக்­க­பி ­ரிய தலைமையிலான குழுவினர், மேற் படி சம்பவம் குறித்து தீவிர விசாரணை களில்  ஈடுபட்டுள்ளனர்.