ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்

Published By: Raam

01 Feb, 2016 | 08:27 AM
image

ரஷ்­யா­வா­னது துருக்­கிய வான் பரப்பில் மீண்டும் அத்­து­மீறல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது எனவும் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் தொடரும் பட்­சத்தில் பின் விளை­வு­களை எதிர்­கொள்ள நேரிடும் எனவும் துருக்கி எச்­ச­ரித்­துள்­ளது.

சிரிய எல்­லை­யு­ட­னான தனது வான் பரப்பில் ரஷ்­யாவின் போர் விமா­ன­மொன்று பறந்­த­தாக துருக்­கிய வெளி­நாட்டு அமைச்சு தெரி­வித்­தது. இந்­நி­லையில் ரஷ்­யா­வா­னது இது எந்த அடிப்­ப­டையும் அற்ற குற்­றச்­சாட்டு என மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த நவம்பர் மாதம் தனது வான் பரப்பில் அத்துமீறிப் பிர­வே­சித்த குற்­றச்­சாட்டில் ரஷ்ய போர் விமா­ன­மொன்றை துருக்கி சுட்டு வீழ்த்­தி­ய­தை­ய­டுத்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்ற நிலை அதி­க­ரித்­துள்­ளது. ரஷ்யா சிரிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கும் ஏனைய போராளி குழுக்­க­ளுக்கும் எதி­ராக கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து வான் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அந்­நாட்டு நேரப்­படி 11.46 மணிக்கு குறிப்­பிட்ட ரஷ்ய எஸ்.யு-–34 விமானம், ரஷ்ய மொழி­யிலும் ஆங்­கி­லத்­திலும் தம்மால் விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­களை அலட்­சியம் செய்து துருக்­கிய வான் பரப்பைக் கடந்து சென்­ற­தாக துருக்­கிய வெளி­நாட்டு அமைச்சால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­பவம் குறித்து ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க துருக்­கி­யி­லுள்ள ரஷ்ய தூத­ருக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய அத்துமீறல்கள் தொடருமானால் ரஷ்யா கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21