பிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்

Published By: Raam

01 Feb, 2016 | 08:18 AM
image

பிரித்­தா­னியா மற்றும் தாய்­லாந்து போர்க்­கப்­பல்கள் கொழும்பு துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மி­ட்டுள்­ளன. இந்த போர்க் கப்பல்கள் இலங்கை கடற்­ப­டை­யுடன் கூட்டு பயிற்­சி­களில் ஈடுபடவுள்ளன.

அடுத்த இரண்டு மாதங்­களில் மேலும் ஆறு போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு வருகை தரவுள்­ளன.

“எச்.எம்.எஸ் டிபென்டர்” எனும் பிரித்­தா­னிய கடற்­ப­டையின் போர்க்­கப்பல் நேற்று முன்­தினம் கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. நல்­லெண்ண விஜ­யத்தை மேற்­கொண்டு வந்­துள்ள இந்த போர்க்­கப்­பலை இலங்­கையின் கடற்­படை கலா­சா­ரத்தின் அடி­ப­டியில் வர­வேற்­கப்­பட்­டது.

அதேபோல் நேற்று முன்­தினம் இலங்­கைக்கு வந்த இந்த போர்க்­கப்­பலின் கட்­ட­ளைத்­த­ள­பதி கப்டன் ஸ்டீபன் ஹக்­மனை கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜெ­கு­ன­ரத்ன சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

மேலும் பிரித்­தா­னிய போர்க்­கப்பல் இலங்­கையில் அடுத்த வாரம் முழு­வதும் தரித்து வைக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்த கால­கட்­டத்தில் இலங்­கையின் கடற்­ப­டை­யுடன் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­னரின் கூட்டு பயிற்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இதே வேளை கடந்த வெள்­ளிக்­கி­ழமை “எச்.டி.எம்.எஸ் பட்­டனி” எனும் தாய்­லாந்து கடற்­படை கப்பல் கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. தாய்­லாந்தில் இருந்து தமது பயிற்சி நட­வைக்­கை­க­ளுக்­காக இலங்கை வந்த இந்த போர்க்­கப்­பலை இலங்­கையின் கடற்­படை சம்­பி­ர­தா­யத்தின் அடிப்­ப­டியில் வர­வேற்று இலங்­கையின் கடற்­படை மரி­யாதை வழங்­கப்­பட்­டது.

மேலும் இந்த கப்­பலும் இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து தமது கூட்டு பயிற்ச்­சி­களை மேற்­கொள்­வ­துடன் எதிர்­வரும் . பெப்­ர­வரி 3ஆம் திகதி வரையில் இலங்­கையில் இந்த கப்பல் தரித்­தி­ருக்கும்.

மேலும் கடந்த ஆண்டின் ஆறு­மாத காலத்தில் இலங்­கைக்கு சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த 25 போர்க்­கப்­பல்கள் விஜயம் மேற்­கொண்­டுள்­ளன. இதில் ரஷ்யா, அவுஸ்­தி­ரே­லிய, ஜப்பான், பங்­க­ளாதேஷ், ஓமன், இந்­தியா,பாகிஸ்தான்,கொரியா மற்றும் சீனா ஆகிய நாடு­களைச் சேர்ந்த போர்க்­கப்­பல்­களே இவ்­வாறு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளன. அதேபோல் அடுத்த இரண்­டு­மாத காலத்தில் மேலும் ஆறு சர்­வ­தேச போர்க்­கப்­பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. பிரித்தானியா,தென்னாபிரிக்கா, ஓமன், நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02