கினிகத்தேன நகரில் கடந்த மூன்று தினங்களாக நீர் வினியோகம் தடைப்பட்டுள்ளமையினால் நகர ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதுடன் நகரவாசிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கினிகத்தேன நீர்வினியோக அதிகார சபையினூடாகவே நகருக்கு நீர் வினியோகம் இடம்பெறுகின்ற  நிலையில் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் நகருக்கான  நீர் வினியோக குழாயில் ஏற்பட்ட நீர் கசிவினால் நீர் வியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் திருத்த பனிகளின் பின்னர் நீர் வினியோகம் வழமைக்கு திரும்பும் என  நீர் வினியோக அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.