அம்பாறையில், போதை மருந்து வைத்திருந்த குற்றத்தின் பேரில் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடத்துனர் பற்றி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுனருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, நடத்துனரின் தங்குமிடத்தை சோதனை செய்த பொலிஸார், அங்கிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிராம் கேரள கஞ்சா என்பனவற்றைப் பறிமுதல் செய்திருந்தனர்.

தடை செய்யப்பட்ட போதை மருந்துகளைக் கைவசம் வைத்திருந்த நடத்துனரையும் அவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நடத்துனர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரியவந்துள்ளது.