திவுலபிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல்மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் மனைவியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேல்மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் மனைவியை இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டியவில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் ஹெந்தலையில் உள்ள அவரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்டையினரால் மீட்கப்பட்டன. இதன்போது சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டார்.

மேலதிக தகவல்களுக்கு 

திவுலபிட்டியவில் பதற்றம் : ஒருவர் பலி - 7 பேர் கைது

ஐ.தே.கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் அவரது மனைவியும் கைது