நவீனரக வாகனம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்ட நபர் வாகனத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

கொஸ்­வத்தை பொலிஸ் பிரிவில் வசிக் கும் பெண் ஒருவர் தனது சுமார் நாற்­பத்தைந்து இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான வேன் ஒன்றை ராகமை பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு ஒரு மாதத்­திற்கு முன் னர் மாதமொன்றுக்கு தொண்ணுரா­யிரம் ரூபா வாடகை ஒப்­பந்­தத்­துடன் வழங்­கி­யுள்ளார்.

முதல் மாதம் தனக்கு பொருந்­திய பிர­காரம் மாத வாடகை வழங்­கப்­ப­டா­ததால் குறித்த பெண் குறித்த நப­ருக்கு தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்ட போதிலும் அவ­ரோடு தொடர்பு கொள்ள முடி­யாது போயுள்ளது. இதனையடுத்து அப்பெண் தனது கண­வ­ருடன் அந்­ந­பரைத் தேடி அவ­ரது வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

அங்கு அந்­நபர் குடி­யி­ருந்த வாடகை வீடும் பூட்­டப்­பட்­டி­ருந்­ததால் இது தொடர்பில் ராகமை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இதன் போதே குறித்த நபர் பற்­றிய தக­வல்கள் தெரிய வந்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இவர் தொடர்பில் தேடிப் பார்த்த போது அவர் பல கோடி ரூபா பெறு­ம­தி­ யான நவீன ரக வாக­னங்கள் பல­வற்றை மாத வாடகை அடிப்­ப­டையில் பெற்றுக் கொண்டு அவ்­வா­க­னத்­துடன் காணாமல் போயுள்­ளமை தொடர்பில் அந்த வாக­னங்­ களின் உரி­மை­யா­ளர்­களும் பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். 

குறித்த நபர் கந்­தானை பிர­ தே­சத் தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்­து ள்ளார். குறித்த வீட்டின் உரிமையாள ருக்கு வீட்டு வாட­கையை வழங்­காமல் அவ்­வீட்­டி­லி­ருந்து சென்றுள்ளமை தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித் தனர்.