யாச­கர்­களின் வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும் என்ற வகையில் கொழும்பு மாந­கரில் அலைந்து திரியும் யாச­கர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காக தனி­யான இடம் அடை­யாளம்  காணப்­பட்டு அங்கு அவர்­க­ளுக்­கான  தங்­கு­மிட வச­திகள்  ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரோஷி சேனா­நா­யக்க தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

யாச­கர்­களும் எமது சமூ­கத்தில் ஒரு பிரி­வி­னரே. அவர்­க­ளது தேவை­களை இனங்­கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வேண்­டி­யது எமது கடமை.

அந்த வகையில் அவர்­க­ளுக்­காக தனி­யான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்து,  அவர்­க­ளது சுய­தொழில், ஆக்­கங்கள் அடை­யாளம் காணப்­பட்டு அவர்­க­ளுக்­கு சுய­தொழில் பயிற்சி வழங்­கப்­படும். அத்தோடு இவர்களின் நலன்கருதி எதிர்கால வேலைத்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.