இன ரீதியாகவும், அர­சியல் ரீதி­யாகவும் நாடு பிள­வு­ப­டு­மானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்ல முடி­யாது. உள்­ள­வர்­களுக்கும், இல்­லா­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெ­ளியை நீக்­கினால் நாடு வளர்ச்­சி­ய­டையும். எனவே குறித்த இடை­வெ­ளியை நீக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்­பாகும் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

"இன ரீதியாகவும், அர­சியல் ரீதி­யாகவும் நாடு பிள­வு­ப­டு­மானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடி­யாது. எனவே சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதின் ஊடாக மாத்­தி­ரமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடியும். உள்­ள­வர்­களுக்கும், இல்­லா­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி கார­ண­மா­கவே உலகில் புரட்­சிகள் ஏற்­ப­டு­கின்­றன. எமது நாட்­டிலும் இளை­ஞர்­க­ளினால் பல போராட்­டங்கள் நடந்­த­மை­யினால் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டன.

இதன்­பி­ர­காரம் உள்­ள­வர்­க­ளுக்கும், இல்­லா­த­வர்­களுக்கும் இடை­யி­லான இடை­வெளி நீக்­கப்­பட வேண்டும். இதனை  நீக்­கினால் நாடு வளர்ச்­சி­ய­டை யும். எனவே குறித்த இடை­வெ­ளியை நீக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்­பாகும். இதன்பிரகாரம் வறுமையை ஒழித்து அதிகளவில் தொழில்வாய்ப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்ல வேண்டும் என்றார்.