புதிய அர­சியல் அமைப்பு குறித்து மஹிந்­த­வுடன் விவா­தத்­திற்கு தயார்

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 11:38 AM
image

புதிய அர­சியல் அமைப்பு நாட்­டினை பிரிப்­ப­தாக கூறு­வ­துடன்  மக்கள் விடு­தலை முன்­னணி நாட்­டினை பிரிக்கும் அணியில் உள்­ள­தாக கூறு­கின்­றனர். தைரியம் இருந்தால் அர­சியல் அமைப்பு தொடர்பில்  மஹிந்த ராஜபக் ஷ  என்­னுடன் விவா­தத்­திற்கு வர­வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக சவால் விடுத்தார்.

மக்கள் முன்­னி­லையில் இவர்­களின் ஊழல் குற்­றங்­களை வெளிப்­ப­டுத்தி நிர்­வா­ணப்­ப­டுத்­தவும் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தேர்தல் இயக்கக் கூட்டம் அம்­பாந்­தோட்டை தங்­கல்லை பிர­தே­சத்தல் இடம்­பெற்­ற­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

இந்த நாட்­டினை புதிய பாதையில் மாற்றி செல்ல இன்று மக்கள் மாற்று சக்தி ஒன்­றினை எதிர்­பார்க்­கின்­றனர். நாம் சரி­யான பாதை­யினை மக்­க­ளுக்கு காண்­பிக்க  முடியும் ஆனால் மக்­களே மாற்­றத்­தினை உரு­வாக்க வேண்டும். இன்று நாடு முகங்­கொ­டுத்து வரும் பிரச்­சி­னை­களில் இருந்து விடு­பட வேண்டும் என்றால் மக்கள் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்டும். அதற்­கான தலை­யீ­டு­களை மக்கள் கையில் எடுக்க வேண்டும். மேலும்  ஊட­கங்­களில் இன்று ஆழ­மான அர­சியல் கொள்கை ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. மக்­களை குழப்பும் அல்­லது தொடர் நாட­கத்­தினை போல்  ஊட­கங்கள் செயற்­ப­டு­வது வெறுக்­கத்­தக்­க­தாகும். 

வேடிக்­கை­யான அர­சியல் காட்­சி­களை காட்டி மக்­களை போலி­யான அர­சி­யலின்  பக்கம் திருப்­பவே முயற்­சிக்­கின்­றனர். தொலைக்­காட்­சியில் ஒரு மணி­நேரம் ஆழ­மான அர­சியல் கலந்­து­ரை­யாடல் செய்ய வேண்டும். பத்­தி­ரி­கை­களும்  மக்கள் மத்­தியில் சென்­ற­டையும் அர­சியல் பத்­தி­களை வெளிப்­ப­டுத்த  வேண்டும். ஊட­கங்­களில் சிறிது கால­மாக தொடர்ச்­சி­யாக ரவி கரு­ணா­நா­ய­கவை மட்டும் தலைப்பு செய்­தி­யாக வைத்­தி­ருந்­தனர். அதன் பின்னர் விஜ­ய­தாச ராஜபக் ஷவை பிடித்­துக்­கொண்­டனர். இப்­போது அர­சியல் அமைப்பு பற்றி பேசுகின்றனர். 

எமது நாடு இன்று பொரு­ளா­தார ரீதியில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி கண்­டுள்­ளது என்றால் வேலை­வாய்ப்­புகள் கிடைக்கும், சுகா­தாரம், விவ­சாயம், கல்வி அனைத்தும் வளர்ச்சி காணும். ஆனால் இவை அனைத்தும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை­க­ளிலும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. நாட்டில் 40 வீத­மான இளம் பராயத்தினர் தொழில் இல்­லாது உள்­ளனர், அல்­லது படிக்­காது உள்­ளனர். ஏனெனில் எமது நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. 

எமது நாட்டின் மிக முக்­கிய நெருக்­கடி நாம் வாங்­கிய கடன்­களில் தான் தங்­கி­யுள்­ளது. நாடு பாரிய கடன் நெருக்­க­டியில் உள்­ளது. முன்­னைய ஆட்­சியின் போது வாங்­கிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக உள்­ள­தாக இந்த அர­சாங்கம் கூறு­கின்­றது. ஆனால் ஆட்­சியை பிடிக்கும்  போது சர்­வ­தேச நிதிகள் குவி­கின்­றன, நன்­கொ­டைகள் வரு­கின்­றன என இவர்கள் கூறினர். அவை அனைத்தும்   எங்கே? எவரும் எமக்கு கடன் தரு­வ­தில்லை, முழு­மை­யான நிதி கடன் அடிப்­ப­டி­யி­லேயே தரு­கின்­றனர். ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்கள் மக்­க­ளுக்கு பொய்­களை கூறி ஏமாற்­றியே ஆட்சி செய்து வரு­கின்­றனர். இப்­போது மட்டும் அல்ல, கடந்த காலங்­க­ளிலும் இதே பொய்யை கூறியே ஆட்சி செய்­கின்­றனர். 

நாம் ஜப்பான், சீனா, குவைத், இந்­தியா, டென்மார்க், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி,  இலங்கை வங்கி, செலான் வங்­கியில் கூட அர­சாங்கம் கட­னா­ளி­யாக உள்­ளது. இதன் கார­ண­மாக தான் இலங்­கையின் நிலங்­களை அவர்கள் சொந்தம் கொண்­டா­டு­கின்­றனர். அர­சாங்­கமும் இலங்­கையின் வளங்­களை விற்­றா­வது மேலும் கொஞ்சம் பணத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்றே பார்க்­கின்­றனர். 

ஆகவே இந்த நிலை­மை­யினை தடுக்க வேண்டும். எமது முழு நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் அடி­மை­யாக்க முன்னர் இந்த மோச­மான ஆட்­சி­யா­ளர்­களை விரட்­டி­ய­டிக்க வேண்டும். மக்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்த வேண்டும். இலங்­கைக்­கான பொருட்­களை இறக்­கு­மதி செய்ய ஒரு ஆண்­டுக்கு 2000 கோடி டொலர் தேவைப்­ப­டு­கின்­றது, ஆனால் ஏற்­று­மதி மூலம் எமக்கு 1000 கோடியே  கிடைக்­கின்­றது. ஆகவே எமது பொரு­ளா­தார முகா­மைத்­துவம் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளது. உள்­நாட்டு உற்­பத்தி எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தெரி­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே டொலர் பெறு­மதி இன்று அதி­க­ரித்­துள்­ளது.

 எமது நாட்டின் ரூபாய் வீழ்ச்சி கண்­டுள்­ள­மையே இதற்குக் காரணம். இது எமது மொத்த பொரு­ளா­தா­ரத்­திலும் தாக்­கத்தை செலுத்தும். இதனால் எமது கடன் தொகை மேலும் அதி­க­ரிக்கும். இருக்கும் கடன் தொகையை விடவும் 28 கோடி ரூபாவால்  எமது கடன் அதி­க­ரிக்கும். அம்­பாந்­தோட்டை, மத்­தள, திரு­கோ­ண­மலை திட்­டங்­களை முன்­னெ­டுக்க நாம் வாங்­கிய கடன்  40 ஆயிரம் கோடி­க­ளாகும் . ஆனால் இன்று நாட்டின் ரூபாயின் வீழ்ச்சி கண்­டுள்­ளது அடுத்து 47 ஆயிரம் கோடி­யாக எமது கடன் தொகை  அதி­க­ரித்­துள்­ளது. 

இதுவா நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி?  30 வீத­மாக எமது ஏற்­று­மதி இன்று 14 வீத­மாக குறை­வ­டைந்­துள்­ளது. இது நாட்­டுக்கு ஒரு­போதும் நல்­ல­தல்ல. இன்று எம்மை விட பின்­தங்­கிய  நாடுகள் அனைத்தும் பொரு­ளா­த­ரத்தில் வளர்ச்சி கண்டு வரு­கின்­றன. ஆனால் எமது ஆட்­சி­யா­ளர்கள் இன்­று­வ­ரையில் கொள்­ளை­ய­டித்து வாழ்ந்து வரு­கின்­றனர். 

ஏழைகள் போல் வாழ்­வதால், வெள்­ளைக்­காரர் போல் வாழ்­வ­தாலோ , சர்­வ­தேச நாடு­களின் நண்பன் என்று கூறும் எவரும் தலை­வர்கள் அல்ல. நாட்டின் பொரு­ளா­த­ரத்தை சரி­யான முறையில் கொண்­டு­சென்று மக்­களை பாது­காக்கும் நபர்­களே தலை­வர்கள். மக்கள் கட­னா­ளி­யாக்கி, நாட்­டினை சர்­வ­தே­சத்­திற்கு விற்று, சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிக்கும் இவர்கள் எவரும் மக்கள் தலை­வர்கள் அல்ல. 

இன்று மக்கள்  நோயா­ளி­க­ளாக மாறி வரு­கின்­றனர்.  கல்­வி­யற்ற சமூகம் உரு­வாகி வரு­கின்­றது, ஊழல், குற்­றங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றது, இந்த தலை­வர்கள் மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சமூகம் இவ்­வாறே அமைந்­துள்­ளது. ஆனால் இவற்றை எல்லாம் விட்டு வெறு­மனே நாடக அர­சி­யலில் அனை­வரும் மூழ்­கி­யுள்­ளனர். புதிய அர­சியல் அமைப்பு நாட்­டினை பிரிப்­ப­தா­கவும், இன­வா­தத்­திற்கு வாய்ப்­பு­களை கொடுப்­ப­தா­கவும் கூறு­வ­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி அதற்கு துணை போவ­தா­கவும் கூறு­கின்­றனர்.

 எம்மை பிரி­வி­னை­வா­திகள் என்று கூறிக்­கொண்டு மஹிந்த, விமல் போன்­ற­வர்­களே பிரி­வி­னை­வா­தி­களின் பக்கம் சேர்ந்­துள்­ளனர். அர­சியல் அமைப்பு குறித்து விவா­தத்­திற்கு எம்மை அழைக்­கின்­றனர். 

அர­சியல் அமைப்பு குறித்து விவாதம் செய்ய நான் தயார், ஆனால் அவர்­களின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­னுடன் விவா­தத்­திற்கு வர­வேண்டும். அவர்­களின் தலைவர் மஹிந்­தவும் ஜே. வி.பி யின் தலைவராக நானும் விவாதம் செய்யலாம். அதற்கான தைரியம் இருக்கும் என்றால் அவர் என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும். தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து நாட்டினை நாசமாக்கிய அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும்.

கொலைகள், கொள்ளைகள் இவர்கள் செய்த அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும். இவை அனைத்தையும் வெளிப்படுத்தி இவர்களை மக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி இவர்களின் முகமூடிகளை கிழித்தெறிய நாம் தயார். அதற்கான எந்த மேடையிலும் இவர்களுடன் நாம் விவாதிக்க தயாராக உள்ளதாக என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37