அக்குரஸ்ஸ - பிடபெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

accident

மோட்டார் சைக்கிளும் ட்ரக் வண்டி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 31 வயதுடைய யுக்ரெயின் நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.