நீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : செல்கிறார் மஹிந்த

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 09:37 AM
image

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அதனைத் திணிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனினும் தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­காத அர­சாங்­கத்தால் நீண்ட காலத்­திற்கு பய­ணிக்க முடி­யா­தென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மறைந்த பேரா­சி­ரியர் நாகொட அம­ர­வங்ச தேரரின் பூத­வு­ட­லுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மரு­தா­னை­யி­லுள்ள வித்­யா­லீய விகா­ரைக்கு நேற்று சென்­றி­ருந்தார். அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேர்தல் நடத்தும் திகதி பற்றி அமைச்­சர்கள் ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு திக­தி­களைக் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் அர­சாங்கம் தேர்­தலை எப்­போது நடத்­தி­னாலும் அதனை எதிர்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். அத்­துடன் நாம் தேர்­தலில் பாரிய வெற்­றி­ய­டைவோம். மேலும் தேர்­தலில் தோல்­வியைத் தழு­வ­வேண்டி வரும் என்­கின்ற அச்சம் அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. அத­னா­லேயே தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­கி­றது.  

மேலும் அர­சாங்கம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எத்­த­ணித்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து அவ­தா­ன­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு கத்­தோ­லிக்க சங்­கமும் தெரி­வித்­துள்­ளது.

நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அதி­காரப்  பகிர்­விற்கு முயற்­சிப்­ப­தாக அர­சாங்­கங்கம் தெரி­விக்­கி­றது.

எனினும் அதி­காரப் பகிர்வு குறித்து சகல தரப்­பிலும் தற்­போது எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.எனவே அர­சாங்கம் பலாத்­கா­ர­மான முறையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வருவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமா? என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தேரர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38