என்னை சிறையில் அடைத்திருக்கலாம் குடும்பத்தை பழி வாங்க வேண்டாம்

Published By: Raam

01 Feb, 2016 | 07:54 AM
image

என்னை பழி­வாங்க வேண்டும் என்­ப­தற்­காக எனது குடும்­பத்தை தண்­டிக்க வேண் டாம். என்னை கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

இன்று எனது மக­னுக்கு நடந்த அநி­யாயம் நாளை எனக்கும் எனது மனை­விக்கும் மற்­றைய சகோ­த­ரர்­க­ளுக்கும் நடக்கும். எனினும் எனது குடும்­பத்தை மட்­டு­மல்ல எனது பரம்­ப­ரையை தண்­டித்­தாலும் கூட எமது பய­ணத்தை தடுக்க முடி­யாது. இந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கள­மி­றங்க நாம் தயா­ரா­கி­விட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை பார்­வை­யிட நேற்று மஹிந்த ராஜபக்ஷ சென்­றி­ருந்த நிலையில் மஹிந்த ராஜ­பக்ஷ வெளியே வந்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

எனது குடும்­பத்தை முழு­மை­யாக பழி­வாங்கும் நோக்­கத்தில் இந்த அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. என்னை பழி­வாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்து எனது மகனை சிறையில் வைத்து என்னை தண்­டிக்க வேண்டாம். நல்­லாட்சி பற்றி கதைத்­துக்­கொண்டு ஆட்­சியை கைப்­பற்­றி­ய­வர்கள் இன்று தனிப்­பட்ட அரா­ஜக ஆட்­சியை நடத்தி வரு­கின்­றனர். எம்மை ஹிட்லர் என வர்­ணித்­து­வந்­த­வர்கள் இன்று ஹிட்­லரை விடவும் மோச­மான வகையில் தமது பழி­வாங்­கல்­களை அரங்­கேற்றி வரு­கின்­றனர்.

என்­மீதும் எனது குடும்­பத்தின் மீதும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வந்­த­வர்கள் இன்று எந்த வகை­யி­லேனும் எனது குடும்­பத்தை பழி­வாங்­கவே நினைக்­கின்­றனர். சர்­வ­தேச வங்­கி­களில் எமது தனிப்­பட்ட பணம் கோடிக்­க­ணக்கில் இருப்­ப­தாக தெரி­வித்­தனர். இர­க­சிய மாளி­கை­களில் நாம் சட்­ட­வி­ரோ­த­மாக பணம் சேர்த்து வைத்­தி­ருப்­ப­தாக கூறி­னார்கள். ஆயுதக் கப்பல் மூலம் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக கூறி­னார்கள். ஆனால் இன்று வரையில் அவை தொடர்பில் ஆதார பூர்­வ­மாக நிரு­பிக்க முடி­ய­வில்லை.

இப்­போது எனது மகனை கைது செய்­ததும் என்னை பழி­வாங்க வேண்டும் என்ற ஒரு நோக்­கத்தில் மாத்­தி­ர­மே­யாகும். எனது அர­சியல் பய­ணத்தை முடி­வு­கட்­டவும் எம்­மீது மக்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை இல்­லா­தொ­ழிக்­க­வுமே இந்த அர­சாங்கம் மிகவும் மோச­மாக நடந்­து­கொள்­கின்­றது. இன்று எமது நிலைமை என்­ன­வென்­பதை மக்கள் நன்­றாக உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதேபோல் இப்­போது எனது எமது மகனின் கைதில் தெளி­வான விளக்கம் எதையும் இவர்­களால் முன்­வைக்க முடி­யாது உள்­ளது.

குற்றம் செய்­தி­ருந்தால் அதற்­கான தண்­டனை கிடைக்க வேண்டும். அது எனது மக­னுக்கு ஒன்­றா­கவும் ஏனை­ய­வர்­க­ளுக்கு வேறொன்­றா­கவும் இருக்கக் கூடாது. ஆனால் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து எம்மை தண்­டிக்க முனை­வது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாது. எனினும் நான் நீதி­மன்­றத்தை நம்­பு­கின்றேன். நீதி­மன்ற சுயா­தீ­னத்தின் மூல­மாக எனது மக­னுக்கு நியாயம் கிடைக்கும் என நம்­பு­கின்றேன்.

அதேபோல் இப்­போதும் நாம் இந்த நாட்டை நேசிக்கும் எனது மக்­களை நேசிக்கும் ஒரு சாதா­ரண நப­ரா­கவே மக்கள் மத்­தியில் செயற்­ப­டு­கின்றேன். மக்­களின் ஆத­ரவும் அன்பும் இப்­போதும் எமக்கு உள்­ளது. அதன் மூல­மாக எமது அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும். எந்த சந்­தர்­பத்­திலும் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு எமக்கு அவ­சியம். மக்­களை நம்­பியே இன்றும் நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.

இன்று எனது மகனை தண்­டித்­ததை போலவே நாளை எனது மனை­வி­யையும் மற்­றைய சகோ­த­ரர்­க­ளையும் கைது செய்வார்கள், என்னையும் கைது செய்வார்கள். எனினும் எனது குடும்பத்தை மட்டுமல்ல எனது பரம்பரையே தண்டித்தாலும் கூட எமது பயணத்தை தடுக்க முடியாது. எமது ஜனநாயகப் பயணம் எந்த வழியிலேனும் தொடர்ந்துகொண்டிருக்கும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்க நாம் தயாராகிவிட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50