மதுபானக்கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவரின் 45 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பையை திருடிய நபரொருவர் சி.சி.ரி.வி. கமராவில் பெறப்பட்ட காட்சி மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவமொன்று அக்கரைபபற்றில் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலுள்ள மதுபானக் கடை ஒன்றில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றக்கிழமை பகல் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மதுக்கடையில் சன நெரிசலின் மத்தியில் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்தபோது அவரது காற்சட்டை பையில் வைக்கப்பட்ட கைப்பையை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த கைப்பபையில் 45 ரூபா பணம் இருந்துள்ள நிலையில் கைப்பை திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது கைப்பை பறிகொடுத்த நிலையில் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் உடனடியாக செயற்பட்டு குறித்த மதுக்கடையிலுள்ள சி.சி.ரி.வி. கமராவை சோதனையிட்டபோது அதில் குறித் நபரின் காற்சட்டை பையில் இருந்து கைப்பையை திருடும் நபரை அடையாளம் காண்ட நிலையில் சின்ன முகத்தவாரத்தைச் சேர்ந்த குறித்த நபரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.