இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை குறிக்கும் ஜிகாத் எனும் பெயரை பிறந்த குழந்தைக்கு சூட்டிய பிரான்ஸிய பெற்றோர்கள் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் குறித்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு "ஜிகாத்" எனும் பெயரை சூட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதி அமைப்பு ஒன்று மாநகர அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. ஜிகாதி பயங்கரவாதிகளை குறிக்கும் ஜிகாத் எனும் பெயரைச் சூட்ட அனுமதி அளிக்க கூடாது என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரான்சில் முதன் முறையாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் பின்னர் தற்போது இந்த பெயரை மாற்றியுள்ளதாக குழந்தையின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். எனினும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.