பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் அப்பட நாயகன் பிரபாஸ். இன்று அவருக்கு 38 ஆவது பிறந்த நாள். 

இதையொட்டி அவருடைய ரசிகர்களுக்காக அவர் தற்போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக்கில் அவருடைய முகத்தோற்றம் தெளிவாக இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டாலும், படத்தில் அவர் எற்றிருக்கின்ற கேரக்டர் வித்தியாசமானது என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் சொல்லிக்கிறார்களாம். இருந்தாலும் இதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். 

பிரபாஸ் அடுத்த பிறந்த நாளுக்குள் திருமணம் செய்து கொள்வார் என்று திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்