ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் பொது தேர்தலில் 311 இடங்களை கைப்பற்றி அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. 

ஷின்சோ அபேயின் லட்சியமான ஜப்பான் போருக்கு பிந்தைய சமாதான அரசியலமைப்பைத் திருத்தியமைக்க மூன்றில் இரண்டு  பெரும்பான்மை இடங்களை பெறுவது மிக முக்கியமானதாக இருந்தது.

பொது தேர்தலில் அபே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளமையானது  மூன்றாவது முறையாக லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவராவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது.

2012 முதல் பிரதமாக உள்ள அபே இத்தேர்தலில் வெற்றி பெற்றமையால் ஜப்பானின் அதிக கால பிரதமராக இருந்தவர் என்ற இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.