நுரை­யீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு  அபா­ய­க­ர­மான சிக்கல் மிக்க  பாரிய அறுவைச் சிகிச்­சைக்கு பதி­லாக மார்புப் பகு­தியில் ஒரு பக்­க­மாக ஏற்­ப­டுத்­தப்­படும் நெருப்­புக்­குச்சி அள­வான சிறிய கீறல் மூலம் புற்­று­நோய்க்­க­லங்­களை வெற்­றி­க­ர­மாக அகற்றும் புதிய மருத்­துவ தொழில்­நுட்­ப­மொன்றை பிரித்­தா­னிய சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

 மேற்­படி புதிய சிகிச்சை மூலம் நோயா­ளிகள்  நான்கே நாட்­களில் குண­ம­டைந்து வழ­மைக்குத் திரும்ப முடியும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சிகிச்­சையின் போது மருத்­து­வர்கள், மார்பில் விலா எலும்பு இடை­வெ­ளி­யி­னூ­டாக ஏற்­ப­டுத்­தப்­படும் சிறிய துளை­யி­னூ­டாக நுண்­ணிய புகைப்­ப­டக்­க­ருவி இணைக்­கப்­பட்ட நுண் குழா­யொன்றை செலுத்தி அத­னூ­டாக நுரை­யீ­ர­லி­லுள்ள  புற்­றுநோய்க் கலங்­களை  சுற்­றி­யுள்ள ஏனைய இழை­யங்­க­ளுக்கு சேதத்தை ஏற்­ப­டுத்­தாத வகையில் அகற்­றுவர்.  

மேற்­படி அறுவைச் சிகிச்­சையின் போது நோயா­ளிக்கு வலியும் பெரு­ம­ள­வுக்கு  குறை­வா­க­வுள்­ள­தாக மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

பிரித்­தா­னி­யாவில்  ஒவ்­வொரு வரு­டமும் சுமார்  46,000  பேர் நுரை­யீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அடை­யாளம் காணப்­பட்டு வரு­கின்­றனர். மேற்­படி புற்­று­நோ­யா­னது  அந்­நாட்­டி­னரை அதி­க­ளவில் பாதிக்கும் புற்­று­நோய்கள் வரி­சையில் மூன்­றா­வது  இடத்தில் உள்­ளது.

புகை­பி­டிப்­ப­வர்கள் மற்றும் 85  வய­துக்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்கள் நுரை­யீரல் புற்­றுநோய் ஏற்­படும் அபா­யத்தை பெரு­ம­ளவில் எதிர்­கொண்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்­களில் பல­ருக்கு வழக்கமான அறுவைச் சிகிச்­சையை தாங்­கக்கூ­டிய வகையில் உடல் நிலை இல்­லா­ததால் பல சந்­தர்ப்­பங்­களில் அத்­த­கைய அறு வைச் சிகிச்­சைகள் தவிர்க்­கப்­ப­டு­வ­தா­கவும் அதனால்  உரிய சிகிச்சை பெறாத அவர்­களில் பலர் முன்­கூட்­டியே மர­ணத்தைத் தழுவ நேரி­டு­வ­தா­கவும் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு தமது புதிய சிகிச்சை முறைமை வரப்­பி­ர­சா­த­மா­க­வுள்­ள­தா­கவும்  மேற்­படி சத்­த­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.