யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

Published By: Priyatharshan

22 Oct, 2017 | 09:34 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் தொன் போஸ்கோ ரிஸ்மன் என்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபரது உடல் நிலை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெருவித்திருப்பதாவது,

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு கடுமையான இரத்த போக்கு நிலை காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்றுள்ளது. இந்திலையில் தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சையானது வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுவாசப்பையில் ஏற்பட்ட அதித இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31