கம்பளை நகரில் அம்பகமுவ பகுதியில் உள்ள வர்த்தகத் தொகுதியொன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

கம்பளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.