கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் பமுணுகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for கோர விபத்து

மோட்டார் கார் ஒன்று சாரதின் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகி அங்கிருந்த இருவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் 41 மற்றும் 55 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். 

சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.