இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் விளம்பரத்திற்காக மக்கள் அபிவிருத்தி வேலைகளை செய்யாது நாங்கள் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் யாவும் தூய்மையாகவும் உறுதியாக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க கூடியவை கடந்த 2013 ஆண்டு இப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அப்போது என்னிடம் கேட்டதற்கிணங்க அன்று ஆற்றில் இருந்த கல்லை உடைத்து அகற்றினேன். அன்று இருந்த நிலைக்கும் இன்றும் எப்படி இப்பிரதேசம் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும் மக்களின் தேவையை அறிந்து ஒரு பாலத்திற்கு இரண்டு பாலங்களை கட்டிக்கொடுத்துள்ளேன். இவை யாவும் நீங்கள் ஒற்றுமையாய் இருந்ததனால் தான் செய்ய முடியந்தது இன்று அரசியல் நிலை மாறியுள்ளது. நீங்கள் வீட்டில் இருந்து கூப்பிட்டால் வந்து சேவை செய்யும் அளவுக்கு இன்று அரசியல் யாப்பு  மாறிவருகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப உங்கள் பிரதேசங்களுக்கு தேவையான பிரதிநிதிகளை  உங்கள் பிரதேசங்களில் இருந்து நீங்களே தெரிவு செய்து கொள்ள வேண்டும். வெளியிலிருந்து வருபவர்களை ஒரு போதும் தெரிவு செய்யக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் இங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின்  பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இன்று புதிய யாப்பு சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் வட்டாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு புதுசு அல்ல ஆனால் இலங்கை மக்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். இதற்கு நாங்கள் எதிர்காலத்தில் தெளிவு படுத்து செயலமர்வு ஒன்றினை செய்யவுள்ளோம்.

உங்களுக்கு நன்கு தெரியும் தேர்தல் காலங்களில் கொழும்பிலிருந்தும் வெளியிடங்களிலிருந்தும் வருவார்கள். அவர்களை நீங்கள் தெரிவு செய்தால் என்ன நடக்கும் என்றால் போகும் வழியில் இறங்கி விட்டு செல்வார்களே தவிர பெரிதாக அபிவிருத்தி செய்ய முடியாது. ஆனால் இன்று உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு அந்த பிரதேசத்தில் உள்ள அபிவிருத்தி பணிகளை அந்த பிரதேசத்தில் உள்ளவரை தெரிவு செய்து கொள்வதன் மூலம் தான் நிறைவேற்ற முடியும். ஆகவே இதில் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை எனவே உங்கள் பிரதிநிதிகளை நீங்களே சரியானவர்களை தெரிவு செய்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவத்தார்.

வட்டவளை பிரதேசத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பாலம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பாலத்தினை நிர்மானித்ததன் மூலம் ஹைட்ரி, டெம்பள்ஸ்டோவ், ஞானநந்தகம, 101 கொலனி உட்பட பல கிராம மற்றும் தோட்ட மக்கள் நன்மையடைகின்றனர்.