கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் லண்டனிற்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.

லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர்கள் ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்காகவே குறித்த விஜத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

ஒன்று கூடல் ஏற்பாட்டாளர்களின் அழைப்பிற்கு அமைய கல்வி இராஜாங்க அமைச்சர் லண்டன் செல்லவுள்ளதுடன், இதன்போது பல்வேறுபட்ட தமிழ் அமைப்புகளையும் இராஜாங்க அமைச்சர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது லண்டனில் தொடர்ந்தும் 5 நாட்கள் தங்கி இருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் அமைச்சர் அமரர் பெ.சந்திரசேகரனின் இழப்பிற்கு பின்னர் கைவிடபட்ட உலக தமிழர்கள் ஒன்று கூடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.