சிவ­னொ­ளி­பா­த­மலைப் பிர­தே­சத்தை எந்­த­வொரு உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் உட்­ப­டாத  விஷேட வல­ய­மாக வர்த்­த­மானி அறி­வித்­தல்  ­மூலம்  பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடு­வ­தற்கு  பாரா­ளு­மன்ற கட்­சித்­த­லை­வர்கள்  தீர்­மா­னித்­துள்­ளனர்.

Image result for சிவ­னொ­ளி­பாதமலை

பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில்  கடந்­த­வாரம் நடை­பெற்ற  கட்சித் தலை­வர்கள்  கூட்­டத்தில் இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.  தற்­போது சிவ­னொ­ளி­பா­த­மலை  அம்­ப­க­முவ பிர­தேச சபையின் கீழ் வரு­கி­றது. அம்­ப­க­முவ பிரதேச சபை பிரிக்கப்பட்டால், சிவனொளிபாதமலை மஸ்கெலியா பிரதேச சபைக்குள் அடங்கும்.