இலங்கைக்கு வழங்கப்படவேண்டிய கடன் தொகையை சீன வங்கியொன்று குறித்த நேரத்தில் செலுத்தாமல் வைத்திருப்பதால், மீரிகமையில் அமைக்கப்பட்டுவரும் அதிவேக பாதையின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீரிகமையில் இருந்து குருணாகலை வரை விஸ்தரிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டப் பணிகள் கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டத்துக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி கடனுதவி அளிப்பதாகத் தெரிவித்திருந்தது.

எனினும், குறித்த நேரத்தில் அந்தக் கடனுதவி வழங்கப்படாமல் இழுபடுவதால் வீதி நிர்மாணப் பணிகள் முடங்கியுள்ளன.

கடனுதவி வழங்கப்பட வேண்டிய காலம் கடந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை கொழும்புக்கான சீன உயர்தாஸ்னிகர் மூலம் சரிசெய்வதற்கு அரசு முயற்சி செய்யவுள்ளது.

மேலும், குறித்த நேரத்தில் நிதி கிடைக்காமல் விட்டால், உரிய நேரத்தில் நிர்மாணப் பணிகளை முடிக்க முடியாது என்பதுடன், காலம் செல்லச் செல்ல பொருட்களின் விலையுயரும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், திட்டமிட்ட பெறுமதியை விட அதிக நிதியைச் செலவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.