ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறு­தினம் (24‍ ஆம் திகதி) உத்­தி­யோக பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு கட்டார் செல்­ல­வுள்ளார்.

கட்டார் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்­நாட்டு தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­திக்­க­வுள்­ள­துடன், அந்­நாட்­டி­லுள்ள இலங்‍­கை­யர்­களின் பிரச்­சி­னைகள் குறித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­ப­தியின் இந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.