புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

Published By: Digital Desk 7

21 Oct, 2017 | 06:09 PM
image

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் "நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள்,  அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பரிசில்கள் வழங்கப்படவிருந்த நிலையில் அக் கௌரவிப்பு இடம்பெறமால் மாவட்ட மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கு மாத்திரம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து ஏனைய மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மனவேதனையுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது. 

இவ் விடயம் தொடர்பாக பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

"இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் கைகளினால் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது, எனவே அனைவரும் உங்கள் பிள்ளைகளை வவுனியா சைவப்பிரகாச கல்லூரிக்கு அழைத்து வருமாறு பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை நம்பி நாங்கள் எமது பிள்ளைகளுடன் வந்தோம். ஆனால் பரிசில்கள் எவையும் வழங்கப்படாமையினால் மிகுந்த வேதனையளிக்கின்றது. எனது மகன் இன்று காலை ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்கவுள்ளேன் என சந்தோசத்தில் வந்தான். ஆனால் தற்போது அழுது கொண்டு செல்கின்றான்" என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினாவிய போது,

ஜனாதிபதிக்கு நேரமின்மை காரணமாகவே இவ் கௌரவிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53