இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் : நடராஜன்

Published By: Digital Desk 7

21 Oct, 2017 | 04:33 PM
image

இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில்  இடம்பெற்ற  "வயலும் வாழ்வு" மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே நடராஜன்  இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த இரண்டரை வருடங்களாக யாழ் இந்திய துணை தூதுவராக இருக்கின்றேன். ஆனால் இதுவரை இங்கு வந்து உங்களை சந்திக்காமை கவலையளிக்கிறது. இருந்தும் இன்று சந்தித்திருக்கிறேன், மகிழ்ச்சியளிக்கிறது.

உங்களுடைய எந்தப்பிரச்சினைகள் என்றாலும் எங்களிடம் கூறுங்கள், எங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருக்கின்றோம். மேலும் இங்குள்ள பிள்ளைகளின் கல்விக்கு நாங்கள்  உதவத்தயாராகவுள்ளோம். குறிப்பாக உயர்தர, பல்கலைக்கழக கல்வியை வறுமை காரணமாக தொடர முடியாதிருந்தால் அவா்கள்  தொடர்பில் எங்களுக்கு விபரம் தாருங்கள் நாங்கள்  உதவுகின்றோம். 

இதனைவிட இந்தியாவில் சென்று மேலும் உயர் கல்வியை தொடர வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்கின்றோம். நீங்கள் ஒரு சதம் கூட செலவு செய்யத் தேவையில்லை, அடிப்படைத் தகுதிகள் இருந்தால்  அதற்காக நீங்கள் எங்களிடம் விண்ணப்பிக்கலாம்." என தெரிவித்தார்.

மேலும் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கும் விண்ணப்பிக்க முடியும் அந்த வாழ்நாள் விசா இருந்தால் இந்தியாவிலும் வசிக்க முடியும். அதற்கு உங்களுடைய உறவு முறை முன்னோா்கள்  இ்நதியாவில் இருந்தவா்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை எனவும் குறிப்பிட்டாா்

இச்சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினா் வை தவநாதன்இ சகாதேவன்இ குட்டிமாமா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04