வைத்தியத் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் எதிர்வாரம் 26ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

தாதியர், ஆய்வகப் பணியாளர்கள் உட்படப் பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளன.

விதிமுறைகளை மீறி ஊழியர்களை நியமிப்பதாலும், சம்பளப் பாகுபாடு என்பன வைத்தியத் துறையில் அனாவசிய தரங்களை உருவாக்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்திய துறைக்கு உரிய முறையில் புகாரளித்தும்கூட, அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டிக்கும் முகமாகவே இந்த அடையாள ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.