இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமியின் ஆசைக்குட்பட்டு 29 வயது ஆணுடன்  நடந்த ஒரு கலாட்டா திருமணம் நடந்துள்ளது.

குறித்த சிறுமியின்  மாமாவுக்கு திருமணமானது, அதை கண்ட சிறுமி தானும் அதை போல திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். தனக்கும் ஒரு காதல் வேண்டும் என அந்த குட்டி தேவதை விரும்பினார்.

குறித்த சிறுமிக்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அல்பானி மெடிக்கல் சென்டரிலேயே ஒரு காதலரும் இருந்தார், சிறுமியின் காதலன்  அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் 29 வயதுடைய குழந்தை செவிலியர்.

தனது நோயாளிகள் மீது அதீத அன்பு செலுத்தும் குணம் கொண்ட  குறித்த இளைஞன் சிறுமியின் விருப்பதை ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

சிறுமிக்கும் இளைஞனுக்கும் திருமணம் வைத்தியசாலையிலேயே விளையாட்டு திருமணமாக நடந்தாலும்  பார்த்தவர் நெஞ்சை உருக வைத்தது அந்த சம்பவம்.

மிட்டாய் மோதிரங்கள் விரல்களில் ஒருவருக்கு ஒருவர் அணிவித்து கேக் வெட்டி ஊட்டிக்கொண்டனர்.

முன்பெல்லாம் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த சிறுமி  இப்போதெல்லாம் சிகிச்சைக்கு தனது கலாட்டா கல்யாண கணவனை காண்பதற்காகவே ஓடோடி வருகிறார் . இந்த நிகழ்வுக்கு பிறகு சிறுமி மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார் என கூறப்படுகிறது.