கினிகத்தேனையில் சற்றுமுன் இடம்பெற்ற மண்சரிவையடுத்து கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கினிகத்தேனை, மில்லகஹாமுல பகுதியிலேயே இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இந்த மண்சரிவால், கொழும்பு-ஹட்டன் பிரதான வீதி முற்றுமுழுதாக மூடப்பட்டது.

இதனால் இவ்வீதி வழியாக போக்குவரத்து முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வாகனச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.